ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வாக அதிகாரப் பகிர்வை வழங்குமாறே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் வாழத் தயார் என்ற வகையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய ரில்வின் சில்வா, சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தமிழர்கள் தேசியக் கொடியை ஏந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் என்பது பெரும்பாண்மை முடிவுகளே இறுதி முடிவு.
அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தல்களில் அரசியல் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு தேவை என்றே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் வடக்கு கிழக்கில் சமஸ்டி தீர்வு தேவை என்பதற்கே பெரும்பாண்மை ஆதரவை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.
1949 சமஷ்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதிகாரப் பகிர்வுக்கான மக்கள் ஆணையும் 1977 தனித் தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணையும் 2004 மிகப் பலமான மக்கள் ஆணையும் அதன் பின்னர் இன்று வரை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்பதற்குமான மக்கள் ஆணையே வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளின் பெரும்பாண்மை முடிவுகளின் படி, அதிகாரப் பகிர்வை கோரி நிற்கும் மக்களிடம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை திணிக்க முற்படுவதை தவிர்த்து வேண்டும் என்றால் தமிழர்களின் அரசியல் அபிலாசையை தீர்க்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை; சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு. ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வாக அதிகாரப் பகிர்வை வழங்குமாறே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் வாழத் தயார் என்ற வகையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய ரில்வின் சில்வா, சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தமிழர்கள் தேசியக் கொடியை ஏந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.ஜனநாயகம் என்பது பெரும்பாண்மை முடிவுகளே இறுதி முடிவு.அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தல்களில் அரசியல் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு தேவை என்றே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் வடக்கு கிழக்கில் சமஸ்டி தீர்வு தேவை என்பதற்கே பெரும்பாண்மை ஆதரவை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.1949 சமஷ்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதிகாரப் பகிர்வுக்கான மக்கள் ஆணையும் 1977 தனித் தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணையும் 2004 மிகப் பலமான மக்கள் ஆணையும் அதன் பின்னர் இன்று வரை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்பதற்குமான மக்கள் ஆணையே வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் முடிவுகளின் பெரும்பாண்மை முடிவுகளின் படி, அதிகாரப் பகிர்வை கோரி நிற்கும் மக்களிடம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை திணிக்க முற்படுவதை தவிர்த்து வேண்டும் என்றால் தமிழர்களின் அரசியல் அபிலாசையை தீர்க்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.