• Feb 10 2025

மின்சாரக் கட்டணங்களுக்கு நிலையான விலையை வழங்க திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு

Chithra / Feb 9th 2025, 1:04 pm
image

  

மின்சாரக் கட்டணங்களுக்கு நிலையான விலையை வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்களில் நிலையான குறைப்பைப் பராமரிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், 

சில ஆண்டுகளுக்குள் செலவுகளைக் குறைத்து நிலையான விலையை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை வேறொரு நிலைக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்களுக்கு நிலையான விலையை வழங்க திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு   மின்சாரக் கட்டணங்களுக்கு நிலையான விலையை வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.மின்சாரக் கட்டணங்களில் நிலையான குறைப்பைப் பராமரிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், சில ஆண்டுகளுக்குள் செலவுகளைக் குறைத்து நிலையான விலையை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை வேறொரு நிலைக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement