• Feb 10 2025

மத்திய மலைநாட்டில் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது

Tharmini / Feb 9th 2025, 12:49 pm
image

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரான காலநிலை கடுமையான வெப்பம் நிலவுவதன்  காரணமாக மத்திய மலைநாட்டில்  உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. 

அதன்படி மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் கொள்ளளவை விட 15 அடி குறைந்து 105 அடி நீர் மட்டும் உள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 12அடி குறைந்து 147 நீர் சேமிப்பில் உள்ளது. விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 13 அடி குறைந்து 80 அடி மட்டுமே நீர் கையிருப்பில் உள்ளது.

கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 11அடி குறைந்து 48 மட்டும் உள்ளது என நீர் மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும், கூறுகையில் தற்போது சற்று வரட்சி காரணமாக நீர் தேக்கங்களின் கரையோர பகுதியில் பற்றைகளுக்கும் வன பகுதிகளுக்கும் விசமிகள் தீ வைக்கக்கூடும் அவ்வாறு தீ வைப்பவர்களை அடையாளம் கண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிப்பதுடன் வனத்துறை அதிகாரிகளுக்கும் உடன் அறிவிக்குமாறு அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கேட்டு கொள்கிறார்.

மத்திய மலைநாட்டில் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரான காலநிலை கடுமையான வெப்பம் நிலவுவதன்  காரணமாக மத்திய மலைநாட்டில்  உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதன்படி மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் கொள்ளளவை விட 15 அடி குறைந்து 105 அடி நீர் மட்டும் உள்ளது.காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 12அடி குறைந்து 147 நீர் சேமிப்பில் உள்ளது. விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 13 அடி குறைந்து 80 அடி மட்டுமே நீர் கையிருப்பில் உள்ளது.கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 11அடி குறைந்து 48 மட்டும் உள்ளது என நீர் மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், கூறுகையில் தற்போது சற்று வரட்சி காரணமாக நீர் தேக்கங்களின் கரையோர பகுதியில் பற்றைகளுக்கும் வன பகுதிகளுக்கும் விசமிகள் தீ வைக்கக்கூடும் அவ்வாறு தீ வைப்பவர்களை அடையாளம் கண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிப்பதுடன் வனத்துறை அதிகாரிகளுக்கும் உடன் அறிவிக்குமாறு அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கேட்டு கொள்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement