• Dec 16 2024

ஜனாதிபதி அநுரவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

Chithra / Dec 16th 2024, 8:58 am
image

 

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

அதேநேரத்தில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானமானது நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.

அங்கு, இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

அதன்பிறகு, இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். 

இந் நிலையில், ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் இலத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதி மற்றும் இந்திய துணை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்முவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுரவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று  இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.அதேநேரத்தில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானமானது நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.அங்கு, இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றனர்.அதன்பிறகு, இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். இந் நிலையில், ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் இலத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும், ஜனாதிபதி மற்றும் இந்திய துணை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்முவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement