சாவகச்சேரியில் இடம்பெறும் தேசிய வீட்டு வசதி திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமித்து வைக்கப்பட்டது.
சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
வடக்கிற்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல பகுதிகளுக்கு சென்று வருகின்றார்.
நேற்று வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மன்னாரில் காற்றாலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று சாவகச்சேரியில் இடம்பெறும் தேசியவீட்டு வசதி திட்ட விழாவில் தலைமை வகித்துள்ளார்.
சாவகச்சேரிக்குச் சென்ற அவருக்கு மக்கள் பலத்த வரேவேற்பை வழங்கினர். தமிழர் பாரம்பரியத்துடன் ஆராத்தி எடுத்து வரவேற்றதுடன்க லாசார நிகழ்வுகளும் அவர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டன.
யாழில் உள்ள பல பகுதிகளுக்குச் சென்ற அநுரவைப் பாக்க மக்கள் கூட்டம் திரண்டு சென்றனர். அவரும் மக்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் பேசியதும் சகஜமாக நடந்துகொண்ட காட்சிகளும் காணொளிகளாகப் பதிவாகி வெளிவந்துள்ளன.
தேசிய வீட்டு வசதித்திட்டத்தை யாழில் ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி; பலத்த உற்சாகத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் சாவகச்சேரியில் இடம்பெறும் தேசிய வீட்டு வசதி திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமித்து வைக்கப்பட்டது.சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கிற்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல பகுதிகளுக்கு சென்று வருகின்றார். நேற்று வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மன்னாரில் காற்றாலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று சாவகச்சேரியில் இடம்பெறும் தேசியவீட்டு வசதி திட்ட விழாவில் தலைமை வகித்துள்ளார். சாவகச்சேரிக்குச் சென்ற அவருக்கு மக்கள் பலத்த வரேவேற்பை வழங்கினர். தமிழர் பாரம்பரியத்துடன் ஆராத்தி எடுத்து வரவேற்றதுடன்க லாசார நிகழ்வுகளும் அவர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டன. யாழில் உள்ள பல பகுதிகளுக்குச் சென்ற அநுரவைப் பாக்க மக்கள் கூட்டம் திரண்டு சென்றனர். அவரும் மக்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் பேசியதும் சகஜமாக நடந்துகொண்ட காட்சிகளும் காணொளிகளாகப் பதிவாகி வெளிவந்துள்ளன.