• Nov 24 2024

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் மாற்றம்..!!

Tamil nila / May 19th 2024, 9:42 pm
image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தலைமையில் நேற்று (18) கூடிய சுமார் ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சட்டத்தரணிகள் சங்கத்தின், கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து கௌசல்ய நவரத்னவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கௌசல்ய நவரத்னவை சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக வேறொரு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை தலைமை பதவிக்கு நியமித்து, சட்டத்தரணிகள் சங்கத்தின் கடந்தகால கணக்கு அறிக்கைகளை அங்கீகரிக்காமல் நிராகரிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இது சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் கறுப்பு நாளாக குறிப்பிடப்படும் என நேற்றைய கூட்டத்தில் தலைமை தாங்கிய சிரேஷ்ட சட்டத்தரணி அக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் விசாரணைக்கு JICA வழங்கிய நிதியை அதன் தலைவர் உட்பட நால்வரின் பெயரைக் கூறி பெற்றுக்கொண்ட சம்பவம் காரணமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கணக்கு அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த இந்த சம்பவத்தை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க ஐந்து மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் மாற்றம். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தலைமையில் நேற்று (18) கூடிய சுமார் ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சட்டத்தரணிகள் சங்கத்தின், கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து கௌசல்ய நவரத்னவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌசல்ய நவரத்னவை சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக வேறொரு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை தலைமை பதவிக்கு நியமித்து, சட்டத்தரணிகள் சங்கத்தின் கடந்தகால கணக்கு அறிக்கைகளை அங்கீகரிக்காமல் நிராகரிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.இது சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் கறுப்பு நாளாக குறிப்பிடப்படும் என நேற்றைய கூட்டத்தில் தலைமை தாங்கிய சிரேஷ்ட சட்டத்தரணி அக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் விசாரணைக்கு JICA வழங்கிய நிதியை அதன் தலைவர் உட்பட நால்வரின் பெயரைக் கூறி பெற்றுக்கொண்ட சம்பவம் காரணமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கணக்கு அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.இந்நிலையில், குறித்த இந்த சம்பவத்தை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க ஐந்து மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement