• Sep 21 2024

விமானம் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி திட்டம்! samugammedia

Chithra / Apr 23rd 2023, 4:01 pm
image

Advertisement

ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்தில் கொண்டு இலங்கையை இந்து சமுத்திரத்தின் பிரதான விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்தில் இது தொடர்பான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு, மேற்கு இறங்குதுறைகளின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்ற நிலையில், 2030ஆம் ஆண்டளவில் அவற்றை முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம், அதனாலேயே சம்பந்தப்பட்ட இரு அமைச்சுக்களையும் ஒன்றாக்கியுள்ளோம்.

சுற்றுலாத்துறை வர்த்தக செயற்பாடுகளுக்கு அவசியமான வசதிகளை கொண்டதாக ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் காணப்படுகின்றன.

திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி குறிந்து நாம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கிறோம்.

அதற்கமைய, திருகோணமலை துறைமுகத்தை வங்காள விரிகுடா வலயத்தின் சுற்றுலா வர்த்தகச் செயற்பாடுகளுக்கான பிரதான தளமாக மாற்றியமைக்ககூடிய இயலுமை பற்றி ஆராய்வது அவசியமாகும்.

அடுத்த 10 - 15 வருடங்களுக்குள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளது. கட்டுநாயக்கவை அபிவிருத்தி செய்வதோடு மத்தல விமான நிலையத்தை வணிக ரீதியில் மேம்படுத்த வேண்டும்.

வடக்கில் பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. உள்ளக விமான சேவைகளுக்காக ஹிங்குரக்கொட பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தொடர்பாடல்களை, படகுச் சேவைகள் வாயிலாக கட்டியெழுப்பும் இயலுமை உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

அதற்கு முன்னதாக அந்நாட்டு மக்களுடன் மீன்பிடித்தல் மற்றும் சுற்றாடல் பிரச்சினை தொடர்பிலும் வெகுவாக அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இன்று பாகிஸ்தானும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றது. அது ஈரானுக்குப் பிறகு வளர்ச்சியடையக்கூடிய நாடாக விளங்குகிறது. மத்திய ஆசியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் சபஹர் துறைமுகத்துடன் ஈரான் முன்னேறினால், மக்ரான் கடற்கரையை இலக்கு வைப்பர். 

எனவே அபிவிருத்தியின் போது மேற்படி சகல விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

இதற்கிடையில், சீனா ஆப்பிரிக்காவுடன் இணைந்து ஆப்பிரிக்காவின் கிழக்கிலிருந்து மேற்கு வரை தொடருந்து பாதையை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அவற்றில் ஒன்று கென்யாவிலிருந்து மேற்கு ஆபிரிக்கக் கடற்கரைக்கும், மற்றொன்று கொங்கோ வழியாகவும் செல்லும் என்பது குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அதற்கமைய வலயத்தின் அனைத்து விநியோக மற்றும் போக்குவரத்துச் செயற்பாடுகள் மாற்றமடையும் என்பதால் இலங்கையை விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை உருவாக்க வேண்டும்.- என்றார்.

விமானம் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி திட்டம் samugammedia ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்தில் கொண்டு இலங்கையை இந்து சமுத்திரத்தின் பிரதான விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்தில் இது தொடர்பான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு, மேற்கு இறங்குதுறைகளின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்ற நிலையில், 2030ஆம் ஆண்டளவில் அவற்றை முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையை விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம், அதனாலேயே சம்பந்தப்பட்ட இரு அமைச்சுக்களையும் ஒன்றாக்கியுள்ளோம்.சுற்றுலாத்துறை வர்த்தக செயற்பாடுகளுக்கு அவசியமான வசதிகளை கொண்டதாக ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் காணப்படுகின்றன.திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி குறிந்து நாம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கிறோம்.அதற்கமைய, திருகோணமலை துறைமுகத்தை வங்காள விரிகுடா வலயத்தின் சுற்றுலா வர்த்தகச் செயற்பாடுகளுக்கான பிரதான தளமாக மாற்றியமைக்ககூடிய இயலுமை பற்றி ஆராய்வது அவசியமாகும்.அடுத்த 10 - 15 வருடங்களுக்குள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.அங்கு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளது. கட்டுநாயக்கவை அபிவிருத்தி செய்வதோடு மத்தல விமான நிலையத்தை வணிக ரீதியில் மேம்படுத்த வேண்டும்.வடக்கில் பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. உள்ளக விமான சேவைகளுக்காக ஹிங்குரக்கொட பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தொடர்பாடல்களை, படகுச் சேவைகள் வாயிலாக கட்டியெழுப்பும் இயலுமை உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.அதற்கு முன்னதாக அந்நாட்டு மக்களுடன் மீன்பிடித்தல் மற்றும் சுற்றாடல் பிரச்சினை தொடர்பிலும் வெகுவாக அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இன்று பாகிஸ்தானும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றது. அது ஈரானுக்குப் பிறகு வளர்ச்சியடையக்கூடிய நாடாக விளங்குகிறது. மத்திய ஆசியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் சபஹர் துறைமுகத்துடன் ஈரான் முன்னேறினால், மக்ரான் கடற்கரையை இலக்கு வைப்பர். எனவே அபிவிருத்தியின் போது மேற்படி சகல விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.இதற்கிடையில், சீனா ஆப்பிரிக்காவுடன் இணைந்து ஆப்பிரிக்காவின் கிழக்கிலிருந்து மேற்கு வரை தொடருந்து பாதையை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.அவற்றில் ஒன்று கென்யாவிலிருந்து மேற்கு ஆபிரிக்கக் கடற்கரைக்கும், மற்றொன்று கொங்கோ வழியாகவும் செல்லும் என்பது குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.அதற்கமைய வலயத்தின் அனைத்து விநியோக மற்றும் போக்குவரத்துச் செயற்பாடுகள் மாற்றமடையும் என்பதால் இலங்கையை விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை உருவாக்க வேண்டும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement