அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அரசியயலமைப்பிற்கு அமைவாக, எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மகிந்த தலைமையிலான கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை வெளியிட்ட ஜனாதிபதி ரணில். அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை அரசியயலமைப்பிற்கு அமைவாக, எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.மேலும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மகிந்த தலைமையிலான கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.