• Jul 16 2025

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 117 வருடங்களிற்குப் பின்னர் 9A சித்தி

shanuja / Jul 16th 2025, 11:45 am
image

க.பொத.சாதாரண தரப் பரீட்சை வெளியாகிய நிலையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 117 வருடங்களிற்குப் பின்னர் முதல்முறை மாணவி ஒருவர் 9A சித்தியைப் பெற்றுள்ளார். 


மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கல்விகற்று வந்த  ஜெகதீஸ்வரன் நிரோஜா என்ற மாணவியே 9A பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். 


கிராமப்புறத்தில் உள்ள மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம் பல காலங்களாக பொருளாதாரம் குன்றிய நிலையில் காணப்பட்டு வருகின்ற நிலையிலேயே குறித்த மாணவி 9A சித்தியைப் பெற்றுள்ளார். 


பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டு 117 வருடங்கள் ஆகின்ற நிலையில் பாடசாலை வரலாற்றில் குறித்த மாணவி இந்த சாதனையைப் பெற்றுள்ளார். 


மாணவியின் சாதனையை நேர்காணல் செய்த போது அவர் தெரிவிக்கையில், 


ஆரம்பக்கல்வி முதல் இற்றை வரையான கற்கையை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்று வந்தேன். எனது கல்விக்கு முற்றுமுழுதான ஆதரவை முதலில் பெற்றோர் வழங்கினர். அதைத் தொடர்ந்து பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும் அதிபர்களும் சக நண்பர்களும் மிகப் பெரும் ஆதரவு வழங்கினனர். 


பாடசாலையில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாதிருந்த போதும் எனது சுயகற்றல் மூலம் நான் இந்தப் பெறுபேற்றைப் பெற்றுள்ளேன். எந்தவொரு தனியார் கல்விநிலையங்களுக்கும் செல்லமால் பாடசாலையிலும் எனது சுயகற்றலிலும் மட்டுமே கற்று இந்தப் பெறுபேற்றைப் பெற்றுள்ளனே். 


அனைத்து மாணவர்களுக்கும் சுயகற்றல் என்பது முக்கியத்துவம். ஆனால் இன்று பலரும் பல தனியார் நிறுவனங்களில் கற்பதால் அவர்களுக்கு சுயகற்றலுக்கு நேரம் கிடைப்பதில்லை. 


ஆகவே மாணவர்களுக்கு நான் கூறவிரும்புவது சுயகற்றலுக்கு முக்கியத்துவம் வழங்கினால் சிறந்த பெறுபேற்றை அடைய முடியும். அவ்வாறே நானும் 9A சித்தியைப் பெற்றேன்.  


எனது இந்த சாதனைக்கு ஆதரவளித்த பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், பழைய அதிபர், ஆசிரியர்கள் சக மாணவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மாணவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 117 வருடங்களிற்குப் பின்னர் 9A சித்தி க.பொத.சாதாரண தரப் பரீட்சை வெளியாகிய நிலையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 117 வருடங்களிற்குப் பின்னர் முதல்முறை மாணவி ஒருவர் 9A சித்தியைப் பெற்றுள்ளார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கல்விகற்று வந்த  ஜெகதீஸ்வரன் நிரோஜா என்ற மாணவியே 9A பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். கிராமப்புறத்தில் உள்ள மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம் பல காலங்களாக பொருளாதாரம் குன்றிய நிலையில் காணப்பட்டு வருகின்ற நிலையிலேயே குறித்த மாணவி 9A சித்தியைப் பெற்றுள்ளார். பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டு 117 வருடங்கள் ஆகின்ற நிலையில் பாடசாலை வரலாற்றில் குறித்த மாணவி இந்த சாதனையைப் பெற்றுள்ளார். மாணவியின் சாதனையை நேர்காணல் செய்த போது அவர் தெரிவிக்கையில், ஆரம்பக்கல்வி முதல் இற்றை வரையான கற்கையை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்று வந்தேன். எனது கல்விக்கு முற்றுமுழுதான ஆதரவை முதலில் பெற்றோர் வழங்கினர். அதைத் தொடர்ந்து பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும் அதிபர்களும் சக நண்பர்களும் மிகப் பெரும் ஆதரவு வழங்கினனர். பாடசாலையில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாதிருந்த போதும் எனது சுயகற்றல் மூலம் நான் இந்தப் பெறுபேற்றைப் பெற்றுள்ளேன். எந்தவொரு தனியார் கல்விநிலையங்களுக்கும் செல்லமால் பாடசாலையிலும் எனது சுயகற்றலிலும் மட்டுமே கற்று இந்தப் பெறுபேற்றைப் பெற்றுள்ளனே். அனைத்து மாணவர்களுக்கும் சுயகற்றல் என்பது முக்கியத்துவம். ஆனால் இன்று பலரும் பல தனியார் நிறுவனங்களில் கற்பதால் அவர்களுக்கு சுயகற்றலுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆகவே மாணவர்களுக்கு நான் கூறவிரும்புவது சுயகற்றலுக்கு முக்கியத்துவம் வழங்கினால் சிறந்த பெறுபேற்றை அடைய முடியும். அவ்வாறே நானும் 9A சித்தியைப் பெற்றேன்.  எனது இந்த சாதனைக்கு ஆதரவளித்த பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், பழைய அதிபர், ஆசிரியர்கள் சக மாணவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மாணவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement