இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொட்டகலை நகருக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இ.தொ.கா வின் தலைவர் செந்தில் தொண்டமான் வரவேற்றுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வானது கொட்டகலை VC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை கொட்டகலை நகரமானது தற்போது பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்வு ஏற்பாடுகள் போன்ற விடயங்களை ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் மாலை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இ.தொ.காவின் மே தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் - அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொட்டகலை நகருக்கு சென்றுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இ.தொ.கா வின் தலைவர் செந்தில் தொண்டமான் வரவேற்றுள்ளார்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வானது கொட்டகலை VC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இதேவேளை கொட்டகலை நகரமானது தற்போது பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்வு ஏற்பாடுகள் போன்ற விடயங்களை ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் மாலை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.