• Nov 28 2024

அரசியலமைப்பின் ஓட்டையைப் பயன்படுத்தி பதவிக்காலத்தை நீடிக்க ஜனாதிபதி ரணில் முயற்சி...!மயந்த திஸாநாயக்க குற்றச்சாட்டு...!

Sharmi / Jul 5th 2024, 8:54 am
image

அரசியலமைப்பின் ஓட்டையைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க முயற்சித்தால் அது ஜனநாயகப் பிழை என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஒருவர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று  ஐக்கிய மக்கள் சக்தி நம்புகிறது.

ஜனநாயகத்தை பாதுகாத்து, ஜனநாயக ரீதியில் நாட்டு மக்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு எவ்வித இடையூறும் இன்றி தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நிலைமைகளை அரசாங்கம் தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த அரச தலைவரை தெரிவு செய்யும் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச நிச்சயமாக களமிறங்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் ஓட்டையைப் பயன்படுத்தி பதவிக்காலத்தை நீடிக்க ஜனாதிபதி ரணில் முயற்சி.மயந்த திஸாநாயக்க குற்றச்சாட்டு. அரசியலமைப்பின் ஓட்டையைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க முயற்சித்தால் அது ஜனநாயகப் பிழை என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஒருவர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.அதன்படி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று  ஐக்கிய மக்கள் சக்தி நம்புகிறது.ஜனநாயகத்தை பாதுகாத்து, ஜனநாயக ரீதியில் நாட்டு மக்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு எவ்வித இடையூறும் இன்றி தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நிலைமைகளை அரசாங்கம் தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அடுத்த அரச தலைவரை தெரிவு செய்யும் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச நிச்சயமாக களமிறங்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement