• Nov 19 2024

தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

Chithra / Jun 23rd 2024, 12:36 pm
image

 

தொழிற்சங்கங்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வரும் நேரத்தில் அரச ஊழியர்களும் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரச ஊழியர்களின் பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தேர்தல்களை நடைபெறும் வருடம் என்பதால் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் கவனத்தை தம் மீது திருப்புவதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை  தொழிற்சங்கங்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வரும் நேரத்தில் அரச ஊழியர்களும் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், அரச ஊழியர்களின் பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தேர்தல்களை நடைபெறும் வருடம் என்பதால் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் கவனத்தை தம் மீது திருப்புவதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement