• Apr 07 2025

யாழ். சென்ற பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி; இருவர் ஸ்தலத்தில் சாவு..! இருவர் படுகாயம்

Chithra / Jun 23rd 2024, 12:24 pm
image

 

அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து இன்று காலை இடம்பெற்றதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடியாவ பிரதேசத்தில் வசிக்கும் 24 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த பேருந்தும், அனுராதபுரத்தில் இருந்து தலாவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு எதிர்புறம் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொசன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இளைஞர்கள் குழு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். சென்ற பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி; இருவர் ஸ்தலத்தில் சாவு. இருவர் படுகாயம்  அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இவ் விபத்து இன்று காலை இடம்பெற்றதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடியாவ பிரதேசத்தில் வசிக்கும் 24 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இரத்தினபுரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த பேருந்தும், அனுராதபுரத்தில் இருந்து தலாவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கரவண்டியின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு எதிர்புறம் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.அனுராதபுரத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொசன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இளைஞர்கள் குழு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now