பொசன் தினம் மற்றும் மறுநாள் நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் மாத்தளை கொங்கஹமுல பிரதேசத்தில் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தேகம மீகம்மன வடக்கு பகுதியைச் சேர்ந்த 57 மற்றும் 17 வயதுடைய இரு பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் மகள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவரும் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதியின் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, ஹம்பகமுவ லிஹினகல தம்வெலோதய வீதியின் லிஹினகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்ட பாதசாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தம்வெலோதய பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு புத்தளம் வீதியின் ஜயபிம பகுதியில் பஸ் ஒன்றும் உழவு இயந்திரமும் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னால் பயணித்த உழவு இயந்திரத்துடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கிரிபாவைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
அநுராதபுரம் பாதெனிய ஏ28 பிரதான வீதியில் தலாவ விவசாய சேவை நிலையத்திற்கு முன்பாக நேற்று (23) காலை முச்சக்கரவண்டியும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுசந்த குமார பெரேரா, சுபுன் சாலிந்த பெரேரா, 24 வயதான கவிந்து மதுஷன் பத்மசிறி என்ற இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரத்தில் கடந்த 22ஆம் திகதி இரவு இடம்பெற்ற “புரவர உதணய” பொசன் நிகழ்வில் கலந்து கொண்டு இளைஞர்கள் குழு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும், அனுராதபுரத்திலிருந்து தலாவ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு எதிர்புறம் வந்த பஸ்ஸுடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அனுராதபுரம் ரம்பேவ வீதியில் பரசங்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளை லொறியொன்று மோதிச் சென்றதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரம்பேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வலதுபுறம் திரும்ப எதிர் திசையிலிருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பின்னால் சென்றவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயமடைந்து ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் 2 நாட்களில் விபத்துக்களில் 7 பேர் உயிரிழப்பு – 15 பேர் படுகாயம் பொசன் தினம் மற்றும் மறுநாள் நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் மாத்தளை கொங்கஹமுல பிரதேசத்தில் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.வத்தேகம மீகம்மன வடக்கு பகுதியைச் சேர்ந்த 57 மற்றும் 17 வயதுடைய இரு பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.முச்சக்கரவண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் மகள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவரும் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதியின் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, ஹம்பகமுவ லிஹினகல தம்வெலோதய வீதியின் லிஹினகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்ட பாதசாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.தம்வெலோதய பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொழும்பு புத்தளம் வீதியின் ஜயபிம பகுதியில் பஸ் ஒன்றும் உழவு இயந்திரமும் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.முன்னால் பயணித்த உழவு இயந்திரத்துடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.கிரிபாவைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.அநுராதபுரம் பாதெனிய ஏ28 பிரதான வீதியில் தலாவ விவசாய சேவை நிலையத்திற்கு முன்பாக நேற்று (23) காலை முச்சக்கரவண்டியும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுசந்த குமார பெரேரா, சுபுன் சாலிந்த பெரேரா, 24 வயதான கவிந்து மதுஷன் பத்மசிறி என்ற இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அநுராதபுரத்தில் கடந்த 22ஆம் திகதி இரவு இடம்பெற்ற “புரவர உதணய” பொசன் நிகழ்வில் கலந்து கொண்டு இளைஞர்கள் குழு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.இரத்தினபுரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும், அனுராதபுரத்திலிருந்து தலாவ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கரவண்டியின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு எதிர்புறம் வந்த பஸ்ஸுடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அனுராதபுரம் ரம்பேவ வீதியில் பரசங்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளை லொறியொன்று மோதிச் சென்றதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ரம்பேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வலதுபுறம் திரும்ப எதிர் திசையிலிருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் பின்னால் சென்றவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயமடைந்து ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.