ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன.
மே மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்த தகவல்களில் கூறப்பட்டன.
இந்த தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதிலளிக்கையில்,
பாராளுமன்றத்தை கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் - ரணிலை ஆதரிக்க மொட்டு கட்சி தீர்மானம். ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்த தகவல்களில் கூறப்பட்டன. இந்த தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதிலளிக்கையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என கேள்வியெழுப்பியிருந்தனர்.இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.