• Nov 22 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் - பலப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

Chithra / Aug 11th 2024, 12:49 pm
image

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினமான எதிர்வரும் வியாழனன்று தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கருவிகள், ஸ்னைப்பர்கள் சகிதம் 4,500 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் ஆணையகத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது

இதன் பின்னரே குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 குறித்த கூட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, நிர்வாகத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  லலித் பத்திநாயக்க மற்றும் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் வேட்பாளர்கள், அவர்களுடன் வருபவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று ரத்நாயக்க கூறியுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர், கட்டிடத்திற்குள்ளும் அதன் அருகாமையிலும் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பார்கள்.

வேட்புமனுக்கள் முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை 30 நிமிட ஆட்சேபனை நேரத்துடன் 11.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இதுவரை 27 வேட்பாளர்கள், தமது கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர்,

இதேவேளை வேட்பாளருடன் சட்டத்தரணி உட்பட இருவர் மாத்திரமே வேட்புமனு மண்டபத்திற்குள் செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணையகத் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 51 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூலை 31 முதல் நேற்று (10) வரை 320 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் - பலப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்  ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினமான எதிர்வரும் வியாழனன்று தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கருவிகள், ஸ்னைப்பர்கள் சகிதம் 4,500 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.தேர்தல் ஆணையகத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுஇதன் பின்னரே குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த கூட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, நிர்வாகத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  லலித் பத்திநாயக்க மற்றும் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தநிலையில் வேட்பாளர்கள், அவர்களுடன் வருபவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று ரத்நாயக்க கூறியுள்ளார்.விசேட அதிரடிப்படையினர், கட்டிடத்திற்குள்ளும் அதன் அருகாமையிலும் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பார்கள்.வேட்புமனுக்கள் முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை 30 நிமிட ஆட்சேபனை நேரத்துடன் 11.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.இதுவரை 27 வேட்பாளர்கள், தமது கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர்,இதேவேளை வேட்பாளருடன் சட்டத்தரணி உட்பட இருவர் மாத்திரமே வேட்புமனு மண்டபத்திற்குள் செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணையகத் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 51 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.ஜூலை 31 முதல் நேற்று (10) வரை 320 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement