• Nov 10 2024

ஜனாதிபதித் தேர்தல்: வெளிநாட்டுத் தலைவர்களின் வரவைத் தவிர்க்கும் இலங்கை?

Sharmi / Jul 15th 2024, 4:27 pm
image

ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர வெளிநாட்டுத் தலைவர்களை மகிழ்விப்பது உள்ளிட்ட இருதரப்பு செயற்பாடுகளை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல்களில் முழு கவனம் செலுத்த அரசு இந்த  முடிவை  எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கிய அரபு அமீரகம், மாலைதீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும்,  அவர்களின் பயணங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், தேர்தலுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்றும், ஆனால் அவரின் பயணம் குறித்த திகதிகள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை எனவும்  தெரிய வருகின்றது.

ஜூலை 30 அல்லது 31 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்: வெளிநாட்டுத் தலைவர்களின் வரவைத் தவிர்க்கும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர வெளிநாட்டுத் தலைவர்களை மகிழ்விப்பது உள்ளிட்ட இருதரப்பு செயற்பாடுகளை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.தேர்தல்களில் முழு கவனம் செலுத்த அரசு இந்த  முடிவை  எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.ஐக்கிய அரபு அமீரகம், மாலைதீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும்,  அவர்களின் பயணங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.எவ்வாறாயினும், தேர்தலுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்றும், ஆனால் அவரின் பயணம் குறித்த திகதிகள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை எனவும்  தெரிய வருகின்றது.ஜூலை 30 அல்லது 31 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement