பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 7500 ரூபாவாகவும், மாணவர் கொடுப்பனவு 6500 ரூபாவாகவும் அதிகரிப்பு. இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பில் பயிற்சியளிப்பதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாவும் பல்கலைக்கழக உட்கட்டமைப்புக்காக 135 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு.
முன்பிள்ளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 100 ரூபாவாக அதிகரிப்பு. இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
தெரிவு செய்யப்பட்ட முன்பிள்ளை பாடசாலை அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு.
ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் அதிசித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபா புலமைப் பரிசில் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு.
விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பல்கலைக்கழக கட்டமைப்பு அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சி செய்தி - அதிகரித்த கொடுப்பனவுகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 7500 ரூபாவாகவும், மாணவர் கொடுப்பனவு 6500 ரூபாவாகவும் அதிகரிப்பு. இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பில் பயிற்சியளிப்பதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாவும் பல்கலைக்கழக உட்கட்டமைப்புக்காக 135 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு.முன்பிள்ளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 100 ரூபாவாக அதிகரிப்பு. இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.தெரிவு செய்யப்பட்ட முன்பிள்ளை பாடசாலை அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு.ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் அதிசித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபா புலமைப் பரிசில் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு.விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.பல்கலைக்கழக கட்டமைப்பு அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.