• Sep 21 2024

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Oct 10th 2023, 2:50 pm
image

Advertisement

 

பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி ஊடக மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் வாழும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் குறித்து தேடிப் பார்க்குமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia  பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி ஊடக மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இலங்கையில் வாழும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்தவகையில், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் குறித்து தேடிப் பார்க்குமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement