• Feb 09 2025

அடுத்த 5 வருடங்களுக்கு தொடர்ந்து செயல்படவுள்ள ஜனாதிபதியின் திட்டம்! வெளியான தகவல்

Chithra / Feb 9th 2025, 8:06 am
image

 

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற உறுதியை வழங்கமுடியும் என க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், “அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்" என்ற கருப்பொருளில், நாடு முழுவதும் 1,740 கிலோமீற்றர் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இந்த புதிய கருப்பொருளுக்கமைய, மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 14 இடங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் 23 இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் 24 இடங்களிலும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 5 இடங்களிலும், மாத்தறை மாவட்டத்தில் 15 இடங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 43 இடங்களிலும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.    

அடுத்த 5 வருடங்களுக்கு தொடர்ந்து செயல்படவுள்ள ஜனாதிபதியின் திட்டம் வெளியான தகவல்  க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற உறுதியை வழங்கமுடியும் என க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.  க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், “அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்" என்ற கருப்பொருளில், நாடு முழுவதும் 1,740 கிலோமீற்றர் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த புதிய கருப்பொருளுக்கமைய, மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 14 இடங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் 23 இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் 24 இடங்களிலும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அத்துடன், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 5 இடங்களிலும், மாத்தறை மாவட்டத்தில் 15 இடங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 43 இடங்களிலும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.    

Advertisement

Advertisement

Advertisement