• Feb 09 2025

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை - அமைச்சர் நளிந்த

Chithra / Feb 9th 2025, 8:01 am
image

 

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு அடுத்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

பேராதனை போதனா வைத்தியசாலையின் புதிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது. 

கடந்த காலங்களில், ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாமையும், நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல வைத்தியர்கள் வெளிநாடு சென்றமையுமே இதற்கு வழிவகுத்த பிரதான காரணங்களாகும். 

சுகாதார சேவையைச் சிக்கல் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு சுமார் 2,800 விசேட வைத்தியர்கள் தேவைப்படுக்கின்ற போதிலும் நாட்டில் தற்போது 2,000 விசேட வைத்தியர்களே உள்ளனர். 

அத்துடன், 20,000 வைத்தியர்கள் தேவையாக உள்ள போதிலும், நாட்டில் தற்போது, சுமார் 17,000 வைத்தியர்களே உள்ளனர். 

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அவசியமான பல சுகாதார பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

அதேநேரம், கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சகல வைத்தியர்களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என  கோரிக்கை விடுப்பதாகவும் அவர்களது சேவை நாட்டுக்கு அவசியமாகிறது எனவும்  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை - அமைச்சர் நளிந்த  சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு அடுத்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் புதிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது. கடந்த காலங்களில், ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாமையும், நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல வைத்தியர்கள் வெளிநாடு சென்றமையுமே இதற்கு வழிவகுத்த பிரதான காரணங்களாகும். சுகாதார சேவையைச் சிக்கல் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு சுமார் 2,800 விசேட வைத்தியர்கள் தேவைப்படுக்கின்ற போதிலும் நாட்டில் தற்போது 2,000 விசேட வைத்தியர்களே உள்ளனர். அத்துடன், 20,000 வைத்தியர்கள் தேவையாக உள்ள போதிலும், நாட்டில் தற்போது, சுமார் 17,000 வைத்தியர்களே உள்ளனர். சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அவசியமான பல சுகாதார பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதேநேரம், கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சகல வைத்தியர்களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என  கோரிக்கை விடுப்பதாகவும் அவர்களது சேவை நாட்டுக்கு அவசியமாகிறது எனவும்  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement