• Jun 30 2024

ஜனாதிபதியின் உரை...! ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் வழங்கப்பட வேண்டும்....! சஜித் பதில்...!

Sharmi / Jun 27th 2024, 10:26 am
image

Advertisement

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால்  நாட்டின் உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதியின் உரைக்கு ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் வழங்கப்பட வேண்டும்  எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நேற்றையதினம்(26) இரவு ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 

கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.  இதற்கு ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் இதற்கு வழங்கப்பட வேண்டும்.

365 நாட்களும் 24 மணி நேரமும் பொய் சொல்வதையே வழக்கமாகவும், தொழிலாகவும் கொண்டு மக்களை ஏமாற்றும் இவ்வேளை, கோயபல்ஸ் கோட்பாடு நாட்டில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி, இருக்கும் ஒன்றை இல்லையென்றுச் சொல்லி, பொய்யை உண்மையாக்கி, உண்மையைப் பொய்யாக்கும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மாயையான பயணத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

ஹிட்லரின் கோயபல்ஸ் ஆட்சியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி பொய்யை உண்மையாக்கினர். இத்தகைய கோட்பாடு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாட்டின் உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கசப்பான உண்மையை இந்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். எமது நாடு 92 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடனில் சிக்கித் தவிக்கிறது. 

இந்த கடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைக் கொண்டுள்ளது. இந்த கடன் தொடர்பில் அறியும் உரிமை மக்களுக்கு இருப்பதாகவும் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜனாதிபதியின் உரை. ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் வழங்கப்பட வேண்டும். சஜித் பதில். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால்  நாட்டின் உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதியின் உரைக்கு ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் வழங்கப்பட வேண்டும்  எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நேற்றையதினம்(26) இரவு ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.  இதற்கு ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் இதற்கு வழங்கப்பட வேண்டும்.365 நாட்களும் 24 மணி நேரமும் பொய் சொல்வதையே வழக்கமாகவும், தொழிலாகவும் கொண்டு மக்களை ஏமாற்றும் இவ்வேளை, கோயபல்ஸ் கோட்பாடு நாட்டில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி, இருக்கும் ஒன்றை இல்லையென்றுச் சொல்லி, பொய்யை உண்மையாக்கி, உண்மையைப் பொய்யாக்கும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மாயையான பயணத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.ஹிட்லரின் கோயபல்ஸ் ஆட்சியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி பொய்யை உண்மையாக்கினர். இத்தகைய கோட்பாடு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாட்டின் உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கசப்பான உண்மையை இந்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். எமது நாடு 92 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடனில் சிக்கித் தவிக்கிறது. இந்த கடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைக் கொண்டுள்ளது. இந்த கடன் தொடர்பில் அறியும் உரிமை மக்களுக்கு இருப்பதாகவும் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement