• Mar 31 2025

ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனம்:பாதுகாப்பு கேள்விக்குறியாகும்- ஜனாதிபதி செயலகம் பதில்..!

Sharmi / Mar 28th 2025, 10:49 pm
image

ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை வெளியிட்டால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கே குறித்த பதில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திததி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வந்து சென்றமைக்கான செலவீனம் மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வருகை தந்து சென்றமை க்கான செலவீனம் தொடர்பிலும் கடந்த 05 ஆம் திகதி மாவட்ட செயலகத்தின் ஊடாக தகவல் கோரப்பட்டது.

தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக கடந்த 17 .02. 2025 அன்று தகவல் கிடைத்தமைக்கான ஆவணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம்  ஜனாதிபதியவர்களின் யாழ்பாணம் விஜயம் தொடர்பான தகவல்  சனாபதி அவர்களின் பாதுகாப்பினை நேரடியாக பாதிக்கும் இரகசியத் தகவல்களாக இருப்பதால் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ) (1)பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த தகவல்களை வழங்கமுடியாது என குறிப்பிட்டு மேன்முறையீடு மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதியின் யாழ் வருகை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கோரப்படும் தகவல்கள் வழங்கபட்டுள்ளன. 

மேலும் அண்மையில் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் செல்வீனம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் 5(1)(அ)(1) கீழ் ஜனாதிபதியின் யாழ் வருகையின் செலவீனத்தை நிராகரித்தது .ஆனால் குறிப்பிட்ட பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள அரசின் ஆட்புலத்தையோ ,இறைமையையோ , பாதுகாப்பையோ வருகைக்கான செலவீனம் கேள்விக்கு ட்படுத்தவில்லை .மக்களின் பொது நிதியே பயன்படுத்தபட்டுள்ளது. மேலும் மேற்குறித்த விடயங்கள் கேள்விக்குட்படுத்தினால் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவீனம் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லையா?

ஆகவே வெளிநாட்டு செலவீனம் தொடர்பில் தெரிவிக்கின்ற பொழுதும் உள்நாட்டு சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளனவா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அரசாங்கம் தகவல் அறியும் உரிமையினை தொடர்ந்து இழுத்தடித்து வழங்க முற்படுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது.

ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனம்:பாதுகாப்பு கேள்விக்குறியாகும்- ஜனாதிபதி செயலகம் பதில். ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை வெளியிட்டால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கே குறித்த பதில் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திததி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வந்து சென்றமைக்கான செலவீனம் மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வருகை தந்து சென்றமை க்கான செலவீனம் தொடர்பிலும் கடந்த 05 ஆம் திகதி மாவட்ட செயலகத்தின் ஊடாக தகவல் கோரப்பட்டது.தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக கடந்த 17 .02. 2025 அன்று தகவல் கிடைத்தமைக்கான ஆவணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம்  ஜனாதிபதியவர்களின் யாழ்பாணம் விஜயம் தொடர்பான தகவல்  சனாபதி அவர்களின் பாதுகாப்பினை நேரடியாக பாதிக்கும் இரகசியத் தகவல்களாக இருப்பதால் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ) (1)பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த தகவல்களை வழங்கமுடியாது என குறிப்பிட்டு மேன்முறையீடு மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதியின் யாழ் வருகை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கோரப்படும் தகவல்கள் வழங்கபட்டுள்ளன. மேலும் அண்மையில் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் செல்வீனம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலகம் 5(1)(அ)(1) கீழ் ஜனாதிபதியின் யாழ் வருகையின் செலவீனத்தை நிராகரித்தது .ஆனால் குறிப்பிட்ட பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள அரசின் ஆட்புலத்தையோ ,இறைமையையோ , பாதுகாப்பையோ வருகைக்கான செலவீனம் கேள்விக்கு ட்படுத்தவில்லை .மக்களின் பொது நிதியே பயன்படுத்தபட்டுள்ளது. மேலும் மேற்குறித்த விடயங்கள் கேள்விக்குட்படுத்தினால் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவீனம் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லையாஆகவே வெளிநாட்டு செலவீனம் தொடர்பில் தெரிவிக்கின்ற பொழுதும் உள்நாட்டு சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளனவா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அரசாங்கம் தகவல் அறியும் உரிமையினை தொடர்ந்து இழுத்தடித்து வழங்க முற்படுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement