• Mar 31 2025

முல்லை அந்தோனியார் ஆலயத்தில் ஜேசுநாதர் சிலையில் நீர்வடியும் அற்புத காட்சி..!

Sharmi / Mar 28th 2025, 11:11 pm
image

முல்லைத்தீவிலுள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் சிலையில் நீர்வடிந்த நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் சிலையின்  மார்பு பகுதியில் இருந்து நீர் வடிந்ததாகவும், உடல் நரம்புகள் புடைத்து இருப்பது போன்று நீல நிறத்தில் காணப்பட்டுள்ளது.

இத்தகவல் பிரதேசத்தில் பரவியமையையடுத்து குறித்த ஆலயத்திற்கு சென்ற மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மக்கள் பலர் கூடி பார்வையிட்டிருந்தனர். 

குறித்த ஜேசுநாதர் சிலையில் இருந்து வழிந்தோடிய நீர்  படிப்படியாக குறைவடைந்ததாகவும் , உடலில் நீர் போன்ற கசிவுத்தன்மை காணப்பட்டதனை தொடர்ந்து உருவச் சிலையின் நிறம் மாற்றமும் ஏற்பட்டதாக அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


முல்லை அந்தோனியார் ஆலயத்தில் ஜேசுநாதர் சிலையில் நீர்வடியும் அற்புத காட்சி. முல்லைத்தீவிலுள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் சிலையில் நீர்வடிந்த நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் சிலையின்  மார்பு பகுதியில் இருந்து நீர் வடிந்ததாகவும், உடல் நரம்புகள் புடைத்து இருப்பது போன்று நீல நிறத்தில் காணப்பட்டுள்ளது.இத்தகவல் பிரதேசத்தில் பரவியமையையடுத்து குறித்த ஆலயத்திற்கு சென்ற மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மக்கள் பலர் கூடி பார்வையிட்டிருந்தனர். குறித்த ஜேசுநாதர் சிலையில் இருந்து வழிந்தோடிய நீர்  படிப்படியாக குறைவடைந்ததாகவும் , உடலில் நீர் போன்ற கசிவுத்தன்மை காணப்பட்டதனை தொடர்ந்து உருவச் சிலையின் நிறம் மாற்றமும் ஏற்பட்டதாக அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement