• Mar 31 2025

வீதியால் பயணித்த பெண்ணின் தங்கச் சங்கிலி அபேஸ்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்- இருவர் கைது..!

Sharmi / Mar 28th 2025, 10:01 pm
image

வீதியால் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட A35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை பின் தொடர்ந்து சென்ற இருவர் குறித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில்  தருமபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகங்களிடமிருந்து, பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் அவர்களின் உடமையில் இருந்து போதைப் பொருட்களும், திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் தடயப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்திய பொழுது, மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு சந்தேக நபர்களையும் மீண்டும் தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வீதியால் பயணித்த பெண்ணின் தங்கச் சங்கிலி அபேஸ்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்- இருவர் கைது. வீதியால் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட A35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை பின் தொடர்ந்து சென்ற இருவர் குறித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில்  தருமபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகங்களிடமிருந்து, பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் அவர்களின் உடமையில் இருந்து போதைப் பொருட்களும், திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.அத்துடன் தடயப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்திய பொழுது, மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு சந்தேக நபர்களையும் மீண்டும் தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement