• Mar 31 2025

மாகாண சபைகளின் அதிகார பறிப்பு: மோடியின் கவனத்துக்கு- சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டு..!

Sharmi / Mar 28th 2025, 8:55 pm
image

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தமிழரசு கட்சியினர் அவரை சந்தித்து, இங்குள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5,6 ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது.

அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

அதேவேளை எங்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு தேசிய ரீதியான தீர்வுக்கான முன்மொழிவை  பிரதமர் மோடி அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை மோடிக்கு தெரிவிப்போம் என்றார்.



மாகாண சபைகளின் அதிகார பறிப்பு: மோடியின் கவனத்துக்கு- சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டு. இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தமிழரசு கட்சியினர் அவரை சந்தித்து, இங்குள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5,6 ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது.அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.அதேவேளை எங்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு தேசிய ரீதியான தீர்வுக்கான முன்மொழிவை  பிரதமர் மோடி அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை மோடிக்கு தெரிவிப்போம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement