தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள், நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தென் கொரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இலங்கையர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இலங்கையர்கள் 27352966, 27352967 மற்றும் 27942968 ஆகிய தொலைபேசி எண்களில் இந்த சம்பவத்தைப் பற்றித் தெரிவிக்கலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக நேற்று (27) நிலவரப்படி, 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, 23,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ பரவும் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம்: கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு. தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள், நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.தென் கொரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இலங்கையர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இலங்கையர்கள் 27352966, 27352967 மற்றும் 27942968 ஆகிய தொலைபேசி எண்களில் இந்த சம்பவத்தைப் பற்றித் தெரிவிக்கலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக நேற்று (27) நிலவரப்படி, 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, 23,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.