• Nov 25 2024

நிலவும் சீரற்ற காலநிலை..! 2546 பேர் பாதிப்பு...! ஒருவர் உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Jan 9th 2024, 10:03 am
image

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 749 குடும்பங்களை சேர்ந்த 2546 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .

இதேவேளை தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

அதனடிப்படையில், பதுளை மாவட்டத்தில் 575 குடும்பங்களைச்சேர்ந்த 1918  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1064 பேர்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 75 குடும்பங்களை சேர்ந்த 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 58 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 95 பேர் பாதிக்கபட்டுள்ளதுடன் 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 33 குடும்பங்களை சேர்ந்த 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 33 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவும் சீரற்ற காலநிலை. 2546 பேர் பாதிப்பு. ஒருவர் உயிரிழப்பு.samugammedia நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 749 குடும்பங்களை சேர்ந்த 2546 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .இதேவேளை தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.அதனடிப்படையில், பதுளை மாவட்டத்தில் 575 குடும்பங்களைச்சேர்ந்த 1918  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1064 பேர்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கண்டி மாவட்டத்தில் 75 குடும்பங்களை சேர்ந்த 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 58 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இரத்தினபுரி மாவட்டத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 95 பேர் பாதிக்கபட்டுள்ளதுடன் 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.கேகாலை மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 33 குடும்பங்களை சேர்ந்த 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 33 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement