• Nov 28 2024

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

Chithra / Sep 29th 2024, 12:53 pm
image

 

ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படும். 

இது தொடர்பில் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன  ருக்ஸான் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்த விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்காத உணவக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை,  சமீபகாலமாக முட்டை விலை குறைந்துள்ளதால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு  ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படும். இது தொடர்பில் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன  ருக்ஸான் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார்.மேலும், இந்த விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்காத உணவக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.இதேவேளை,  சமீபகாலமாக முட்டை விலை குறைந்துள்ளதால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.எனினும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement