• Jul 15 2025

பல்வேறு சட்ட சிக்கல்களில் மாகாண சபைத் தேர்தல்; ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

Chithra / Jul 15th 2025, 2:01 pm
image


பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் என்றும் தேர்தல் ஆணையம் மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் தயாராக இல்லை என்று ஆணையத்தின் தலைவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆனந்த ரத்நாயக்க இதுதொடர்பில்  தெரிவிக்கையில் 

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்பு பல புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம்.

அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவிதார்.

பழைய முறையின் கீழ் (விகிதாசார) வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில், எல்லை நிர்ணயம் தேவைக்கேற்ப செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தனிநபர் மசோதாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு சட்ட சிக்கல்களில் மாகாண சபைத் தேர்தல்; ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் என்றும் தேர்தல் ஆணையம் மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் தயாராக இல்லை என்று ஆணையத்தின் தலைவர்கள் தெரிவித்தனர்.தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆனந்த ரத்நாயக்க இதுதொடர்பில்  தெரிவிக்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்பு பல புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம்.அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவிதார்.பழைய முறையின் கீழ் (விகிதாசார) வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில், எல்லை நிர்ணயம் தேவைக்கேற்ப செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தனிநபர் மசோதாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement