ஹெல்மெட்டில் சிசிரிவி கமரா பொருத்திய நபர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்த கேளிக்கை சம்பவம் பதிவாகி காணொளியாக வெளிவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும் சதீஷ் சவுகான் என்ற நபரே தனது ஹெல்மெட்டின் மேற்பகுதியில் சிசிரிவி கமராவைப் பொருத்தி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார்.
சதீஷ் சவுகானுக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கம் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
பக்கத்து வீட்டுக்காரரருடன் ஏற்பட்ட தகராறில் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர் என்று சதீஷ் சவுகான் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஆனால் அந்த முறைப்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிவித்து ஹெல்மெட் மேற்பகுதியில் கமரா பொருத்தி பயணித்து வருகிறார்.
இது தொடர்பாக காணொளி ஒன்றில் அவர் தெரிவிக்கையில்,"எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் வீடியோ ஆதாரமாவது இருக்கும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
அதன்பின்னர் இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், "நாங்கள் 2 தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சித்தோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது" என்று தெரிவித்தனர்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் குறித்த நபரின் காணொளி தற்போது வைரலாகி வருவதுடன் பல நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
எனக்கு ஏதாவது நடந்தால் வீடியோவில் ஆதாரம் கிடைக்கும் - ஹெல்மெட்டில் சிசிரிவி கமரா பொருத்திய நபரின் காணொளி வைரல் ஹெல்மெட்டில் சிசிரிவி கமரா பொருத்திய நபர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்த கேளிக்கை சம்பவம் பதிவாகி காணொளியாக வெளிவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும் சதீஷ் சவுகான் என்ற நபரே தனது ஹெல்மெட்டின் மேற்பகுதியில் சிசிரிவி கமராவைப் பொருத்தி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார். சதீஷ் சவுகானுக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கம் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. பக்கத்து வீட்டுக்காரரருடன் ஏற்பட்ட தகராறில் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர் என்று சதீஷ் சவுகான் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த முறைப்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிவித்து ஹெல்மெட் மேற்பகுதியில் கமரா பொருத்தி பயணித்து வருகிறார். இது தொடர்பாக காணொளி ஒன்றில் அவர் தெரிவிக்கையில்,"எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் வீடியோ ஆதாரமாவது இருக்கும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். அதன்பின்னர் இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், "நாங்கள் 2 தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சித்தோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது" என்று தெரிவித்தனர். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் குறித்த நபரின் காணொளி தற்போது வைரலாகி வருவதுடன் பல நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.