பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி இன்று (15) காலை கோப்பாய் கலாசாலையில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று (15) மாலை ஏழாலை, சுழிபுரம், சண்டிலிப்பாய் பகுதிகளில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் பிரதமர் பங்கெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, நாளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்துக்கு விஜயம் பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.அதன்படி இன்று (15) காலை கோப்பாய் கலாசாலையில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து இன்று (15) மாலை ஏழாலை, சுழிபுரம், சண்டிலிப்பாய் பகுதிகளில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் பிரதமர் பங்கெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனையடுத்து, நாளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.