யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் (சென் பற்றிக்ஸ் கல்லூரி) 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் பிரதி அதிபர் ஜக்சன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக இடம்பெறும் நடைபவனியானது கல்லூரிக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மைக்காலமாக அதிகளவில் ஏற்படும் தொற்றா நோய்களை தடுத்தல் எனும் தொணிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு நடைபவனியை ஒழுங்கமைத்துள்ளோம்.
நடைபவனியானது எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி காலை 8 மணிக்கு கல்லூரியில் உள்ள சிற்றாலயத்தில் அமைந்துள்ள பத்திரிசியாரின் உருவச் சிலையிலிருந்து ஆரம்பமாகி சென் பற்றிக்ஸ் வீதியூடாக பிரதான வீதியை அடைந்து பிரதான வீதியூடாக பஸ்ரியன் சந்தியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக கார்கில்ஸ் சந்தியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியூடாக எமது கல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான ரி.எம்.எம் ஜோங்கினுடைய உருவச் சிலை அமைந்துள்ள யாழ் பொது நூல் நிலையத்தை அடைந்து அங்கு சிறிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
குறிப்பாக ரி.எம்.எம் ஜோங்கினுடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அங்கிருந்து பிரதான வீதியூடாக குறித்த நடைபவனியானது மீண்டும் கல்லூரியை வந்தடையவுள்ளதுடன் அங்கு கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
அதேவேளை குறித்த நடைபவனியானது ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகவும் எமது கல்லூரி தொடர்பான கற்றல் செயற்பாடுகள் இணைப்பாட விதான செயற்பாடுகள் வெவ்வேறு வகையான நிகழ்வுகள் என இவை அனைத்தையுமே பிரதிபலித்து கல்லூரிக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துவதற்காகவும் 175 வது ஆண்டு நிறைவின் ஆரம்பத்தை எமது சூழல் சமூகம் சார்ந்தவர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாகவும் நாம் இந்த நடைபவனியை திட்டமிட்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 175ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபவனி நிகழ்வு. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் (சென் பற்றிக்ஸ் கல்லூரி) 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் பிரதி அதிபர் ஜக்சன் தெரிவித்துள்ளார்யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக இடம்பெறும் நடைபவனியானது கல்லூரிக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.குறிப்பாக அண்மைக்காலமாக அதிகளவில் ஏற்படும் தொற்றா நோய்களை தடுத்தல் எனும் தொணிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு நடைபவனியை ஒழுங்கமைத்துள்ளோம்.நடைபவனியானது எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி காலை 8 மணிக்கு கல்லூரியில் உள்ள சிற்றாலயத்தில் அமைந்துள்ள பத்திரிசியாரின் உருவச் சிலையிலிருந்து ஆரம்பமாகி சென் பற்றிக்ஸ் வீதியூடாக பிரதான வீதியை அடைந்து பிரதான வீதியூடாக பஸ்ரியன் சந்தியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக கார்கில்ஸ் சந்தியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியூடாக எமது கல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான ரி.எம்.எம் ஜோங்கினுடைய உருவச் சிலை அமைந்துள்ள யாழ் பொது நூல் நிலையத்தை அடைந்து அங்கு சிறிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.குறிப்பாக ரி.எம்.எம் ஜோங்கினுடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அங்கிருந்து பிரதான வீதியூடாக குறித்த நடைபவனியானது மீண்டும் கல்லூரியை வந்தடையவுள்ளதுடன் அங்கு கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.அதேவேளை குறித்த நடைபவனியானது ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகவும் எமது கல்லூரி தொடர்பான கற்றல் செயற்பாடுகள் இணைப்பாட விதான செயற்பாடுகள் வெவ்வேறு வகையான நிகழ்வுகள் என இவை அனைத்தையுமே பிரதிபலித்து கல்லூரிக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துவதற்காகவும் 175 வது ஆண்டு நிறைவின் ஆரம்பத்தை எமது சூழல் சமூகம் சார்ந்தவர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாகவும் நாம் இந்த நடைபவனியை திட்டமிட்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.