எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் பேரனால் தள்ளிவிடப்பட்டதில் கீழே விழுந்து தாத்தா உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
வீட்டின் உரிமை தொடர்பில் மகன், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், உயிரிழந்த நபர் தகராறில் குறுக்கிட்ட போது அவரது பேரனால் தள்ளிவிடப்பட்டதாகவும், தரையில் விழுந்து காயமடைந்த அவர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பரகடுவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராவார்.
உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகளின் கணவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ஒரு பிள்ளையும் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேரன் தள்ளிவிட்டதில் உயிரிழந்த தாத்தா எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் பேரனால் தள்ளிவிடப்பட்டதில் கீழே விழுந்து தாத்தா உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது வீட்டின் உரிமை தொடர்பில் மகன், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், உயிரிழந்த நபர் தகராறில் குறுக்கிட்ட போது அவரது பேரனால் தள்ளிவிடப்பட்டதாகவும், தரையில் விழுந்து காயமடைந்த அவர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரகடுவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராவார். உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகளின் கணவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ஒரு பிள்ளையும் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.