தமிழ் - சிங்கள புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஸ்ரீ மகா நாத தேவால வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இந்நிலையில், கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.
ஆசிர்வாத பிரித் பாராயண நிகழ்வைத் தொடர்ந்து காலை 9.04 மணி சுப நேரத்தில், விகாரையின் தலைமை விகாராதிபதி சங்கைக்குரிய கொலன்னாவே தம்மிக்க தேரரின் தலைமையில், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் உட்பட இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா, நகரசபை செயலாளர் நெலும் குமாரி கமகே மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு தமிழ் - சிங்கள புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஸ்ரீ மகா நாத தேவால வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிலையில், கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்றார். ஆசிர்வாத பிரித் பாராயண நிகழ்வைத் தொடர்ந்து காலை 9.04 மணி சுப நேரத்தில், விகாரையின் தலைமை விகாராதிபதி சங்கைக்குரிய கொலன்னாவே தம்மிக்க தேரரின் தலைமையில், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் உட்பட இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா, நகரசபை செயலாளர் நெலும் குமாரி கமகே மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.