• Oct 01 2024

பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை கடும் வெயிலுக்குள் நிற்க வைத்த அதிபர்! யாழில் சம்பவம் samugammedia

Chithra / Aug 10th 2023, 3:31 pm
image

Advertisement

தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் தெல்லிப்பழையில் உள்ள பிரபல கல்லூரி அதிபர், கடந்த 7ஆம் திகதி மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தேர்ச்சி அறிக்கைகளை பெறுவதற்கும், பெற்றோர் சந்திப்புக்குமாக பெற்றோரை பாடசாலை சமூகம் பாடசாலைக்கு அழைத்திருந்தது.

இந்நிலையில் குறித்த சந்திப்புக்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை, அதிபர் வகுப்புக்கு வெளியே வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கல்லூரியின் அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது, பெற்றோரை சந்திப்புக்கு அழைத்து வராத மாணவர்களுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் வெயிலில் நிறுத்தப்படவில்லை. ஒரு பாடவேளை மட்டுமே மாணவர்கள் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பாடசாலைக்கும், எமக்கும் இழுக்கு ஏற்படுத்துவதற்காக சிலர் இதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். நீங்கள் மாணவர்களை நிறுத்தி வைத்த இடத்தினை வந்து பார்வையிடலாம் - என்றார். 

பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை கடும் வெயிலுக்குள் நிற்க வைத்த அதிபர் யாழில் சம்பவம் samugammedia தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் தெல்லிப்பழையில் உள்ள பிரபல கல்லூரி அதிபர், கடந்த 7ஆம் திகதி மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில்,தேர்ச்சி அறிக்கைகளை பெறுவதற்கும், பெற்றோர் சந்திப்புக்குமாக பெற்றோரை பாடசாலை சமூகம் பாடசாலைக்கு அழைத்திருந்தது.இந்நிலையில் குறித்த சந்திப்புக்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை, அதிபர் வகுப்புக்கு வெளியே வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து கல்லூரியின் அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது, பெற்றோரை சந்திப்புக்கு அழைத்து வராத மாணவர்களுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது.இதன்போது மாணவர்கள் வெயிலில் நிறுத்தப்படவில்லை. ஒரு பாடவேளை மட்டுமே மாணவர்கள் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.பாடசாலைக்கும், எமக்கும் இழுக்கு ஏற்படுத்துவதற்காக சிலர் இதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். நீங்கள் மாணவர்களை நிறுத்தி வைத்த இடத்தினை வந்து பார்வையிடலாம் - என்றார். 

Advertisement

Advertisement

Advertisement