• May 06 2026

முதலமைச்சர் ஆவதில் சிக்கல்! ஆதரவு கேட்ட விஜய் - காங்கிரஸின் அதிரடி தீர்மானம்

Chithra / May 6th 2026, 8:24 am
image

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள் குழுவின் கூட்டம் நேற்று நள்ளிரவில் காணொளி வாயிலாக நடைபெற்றது. 


இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் விஜய் தலைமையில் ஆட்சி அமைவதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


ஆதரவு வழங்க முன்வந்தாலும், தவெக-வுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அல்லது அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை எக்காரணம் கொண்டும் தவெக பெறக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும் என கூறப்படுகிறது. 


இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைக்க இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவைக் கோரியுள்ளதாகத் தெரிவித்திருந்தார். 


மேலும், தனது அரசியல் பயணத்தில் பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளால் தான் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.தமிழக மக்களின் தீர்ப்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கானதாகும் என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்தத் திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில்கள் எதுவும் வெளிவரவில்லை.


அண்மையில், நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.


இருப்பினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை விட 10 இடங்கள் குறைவாக இருப்பதால், காங்கிரஸின் ஆதரவு தற்போது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.


முதலமைச்சர் ஆவதில் சிக்கல் ஆதரவு கேட்ட விஜய் - காங்கிரஸின் அதிரடி தீர்மானம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள் குழுவின் கூட்டம் நேற்று நள்ளிரவில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் விஜய் தலைமையில் ஆட்சி அமைவதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.ஆதரவு வழங்க முன்வந்தாலும், தவெக-வுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அல்லது அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை எக்காரணம் கொண்டும் தவெக பெறக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும் என கூறப்படுகிறது. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைக்க இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவைக் கோரியுள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும், தனது அரசியல் பயணத்தில் பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளால் தான் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.தமிழக மக்களின் தீர்ப்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கானதாகும் என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்தத் திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில்கள் எதுவும் வெளிவரவில்லை.அண்மையில், நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.இருப்பினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை விட 10 இடங்கள் குறைவாக இருப்பதால், காங்கிரஸின் ஆதரவு தற்போது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement