• Apr 02 2025

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - பிரதமர் ஹரிணி உறுதி

Chithra / Nov 21st 2024, 8:02 am
image


அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக, மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நேற்று தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல்வியானது முறையாகவும் கால ஒழுங்கிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

தற்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - பிரதமர் ஹரிணி உறுதி அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக, மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நேற்று தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல்வியானது முறையாகவும் கால ஒழுங்கிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.தற்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

Advertisement

Advertisement

Advertisement