2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில், கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இருந்த போதிலும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் படி, உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய, அடுத்து வரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சை திகதியில் மாற்றமா. வெளியான முக்கிய அறிவிப்பு 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில், கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இருந்த போதிலும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் படி, உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.மேலும், இந்த பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய, அடுத்து வரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.