• Feb 15 2025

மாத்தறையில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு - சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

Chithra / Nov 21st 2024, 7:50 am
image

 

மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஸ்கல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஸ்கல பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகிலேயே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வலஸ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மாத்தறையில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு - சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு  மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஸ்கல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வலஸ்கல பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகிலேயே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் வலஸ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement