ஜனாதிபதி விஜயம் தொடர்பாக போராட்டங்களை முன்னெடுக்க 10 பேருக்கு எதிராக பொலிசாரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பூநகரி கோட்டை, கயு உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்ட பின்னர் பிரதேச செயலகத்தில் சந்திப்பொன்றிலும் கலந்துகொள்ள உள்ளார்.
இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து பூநகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பெறும் வகையில் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலை மற்றும் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தே குறித்த தடை உத்தரவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, சட்ட ரீதியாக மக்களிற்கு வழங்கப்பட் உரிமையை தடுக்க முடியாது எனவும், நிகழ்வு இடம்பெறும் பகுதியில் போராட்டங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நிகழ்வு இடம் பெறும் பகுதியில் போராட்டத்தை மேற்கொண்டால் கைது செய்யும் வகையிலும், உயர்தர பரீட்சை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும், ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளிற்கு இடமளிக்காத வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விஜயம் தொடர்பில் போராட்டங்களை முன்னெடுக்க 10 பேருக்கு எதிராக தடை.samugammedia ஜனாதிபதி விஜயம் தொடர்பாக போராட்டங்களை முன்னெடுக்க 10 பேருக்கு எதிராக பொலிசாரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.பூநகரி கோட்டை, கயு உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்ட பின்னர் பிரதேச செயலகத்தில் சந்திப்பொன்றிலும் கலந்துகொள்ள உள்ளார்.இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து பூநகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பெறும் வகையில் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலை மற்றும் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தே குறித்த தடை உத்தரவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, சட்ட ரீதியாக மக்களிற்கு வழங்கப்பட் உரிமையை தடுக்க முடியாது எனவும், நிகழ்வு இடம்பெறும் பகுதியில் போராட்டங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.நிகழ்வு இடம் பெறும் பகுதியில் போராட்டத்தை மேற்கொண்டால் கைது செய்யும் வகையிலும், உயர்தர பரீட்சை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும், ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளிற்கு இடமளிக்காத வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.