ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் கட்சி தாவுகின்ற முறை தடை செய்யப்படுமென அக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் நாச்சியாத்தீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி உருவாக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தினூடாக கட்சி தாவுகின்ற முறை தடை செய்யப்படும்.
அதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு முடிவெடுக்கக்கூடிய வகையில் சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 24 மாதங்களுக்கு ரூபாய் 20,000 விதம் வழங்கி 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கின்ற வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
50 கிலோகிராம் உர மூடை ஒன்றை 5,000 ரூபாவிற்கு வழங்குவதோடு, விவசாய கடனையும் இரத்து செய்வோம்.
விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களையும் முன்னெடுப்போம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் கட்சி தாவுகின்ற முறைக்கு தடை- சஜித் உறுதி. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் கட்சி தாவுகின்ற முறை தடை செய்யப்படுமென அக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அநுராதபுரம் நாச்சியாத்தீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி உருவாக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தினூடாக கட்சி தாவுகின்ற முறை தடை செய்யப்படும்.அதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு முடிவெடுக்கக்கூடிய வகையில் சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் 24 மாதங்களுக்கு ரூபாய் 20,000 விதம் வழங்கி 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கின்ற வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.50 கிலோகிராம் உர மூடை ஒன்றை 5,000 ரூபாவிற்கு வழங்குவதோடு, விவசாய கடனையும் இரத்து செய்வோம்.விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களையும் முன்னெடுப்போம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.