• May 17 2024

அரச உத்தியோகத்தர்கள் ஐபோன், ஐபேட் பயன்படுத்தத் தடை- வெளியான அதிரடி அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jul 18th 2023, 7:57 pm
image

Advertisement

ரஷ்யாவில் அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உளவு நிறுவனங்கள். உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு இச்சாதனங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், மெக் முதலான தொலைபேசிகள்,கணினிகள் பாதுகாப்பற்றவை என ரஷ்யாவின் சமஷ்டி பாதுகாப்புச் சேவை (எவ்எஸ்பி) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரச ஊழயர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை முதல் இத்தடை அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் உக்ரேன் மீதான தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விடுத்த உத்தரவில், 2025 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகாதாரம்,விஞ்ஞானம்,நிதித்துறை முதலான துறைகளில் பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அரச உத்தியோகத்தர்கள் ஐபோன், ஐபேட் பயன்படுத்தத் தடை- வெளியான அதிரடி அறிவிப்பு.samugammedia ரஷ்யாவில் அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள். உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு இச்சாதனங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது.அமெரிக்காவின் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், மெக் முதலான தொலைபேசிகள்,கணினிகள் பாதுகாப்பற்றவை என ரஷ்யாவின் சமஷ்டி பாதுகாப்புச் சேவை (எவ்எஸ்பி) தெரிவித்துள்ளது.இந்நிலையில் அரச ஊழயர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று திங்கட்கிழமை முதல் இத்தடை அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் உக்ரேன் மீதான தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விடுத்த உத்தரவில், 2025 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகாதாரம்,விஞ்ஞானம்,நிதித்துறை முதலான துறைகளில் பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement