• Apr 22 2026

மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடக்கும் - நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி

Chithra / Mar 1st 2026, 8:47 am
image


இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் தொடர்பில், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டத்தின் அடிப்படையில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.


நோர்வே நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட விவாதத்தின்போது, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இலங்கையின் நிலைவரம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தார். 


இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஊடகங்களுக்கு விசேட விளக்கமளித்துள்ளார்.


செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட கடந்த காலப் பிரச்சினைகள் குறித்துச் சட்ட ரீதியான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். இதில் அரசியல் தலையீடுகள் எவையும் இருக்காது. உண்மைகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசு உறுதியாக உள்ளது.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கம் எமது அரசுக்கு இல்லை. இராணுவமயமாக்கல் தொடர்பான கவலைகளுக்குச் செயல்முறை ரீதியான தீர்வுகள் எட்டப்படும்.


வடக்கு - கிழக்கில் மதத் தலங்கள் தொடர்பாக நிலவும் சர்ச்சைகள் மற்றும் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அரசு விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அனைத்து இன மக்களும் எவ்வித அச்சமுமின்றித் தமது மதங்களைப் பின்பற்றுவதற்கான சமத்துவமான சூழல் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.


மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் எழுப்பும் நியாயமான கேள்விகளைப் புறக்கணிக்காது, அவற்றுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.


யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற வேண்டியதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதிலளிக்க வேண்டியதும் அரசின் தார்மீகப் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், இதற்காக ஏற்கனவே உள்ள பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டு, தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடக்கும் - நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் தொடர்பில், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டத்தின் அடிப்படையில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.நோர்வே நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட விவாதத்தின்போது, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இலங்கையின் நிலைவரம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஊடகங்களுக்கு விசேட விளக்கமளித்துள்ளார்.செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட கடந்த காலப் பிரச்சினைகள் குறித்துச் சட்ட ரீதியான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். இதில் அரசியல் தலையீடுகள் எவையும் இருக்காது. உண்மைகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசு உறுதியாக உள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கம் எமது அரசுக்கு இல்லை. இராணுவமயமாக்கல் தொடர்பான கவலைகளுக்குச் செயல்முறை ரீதியான தீர்வுகள் எட்டப்படும்.வடக்கு - கிழக்கில் மதத் தலங்கள் தொடர்பாக நிலவும் சர்ச்சைகள் மற்றும் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அரசு விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அனைத்து இன மக்களும் எவ்வித அச்சமுமின்றித் தமது மதங்களைப் பின்பற்றுவதற்கான சமத்துவமான சூழல் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் எழுப்பும் நியாயமான கேள்விகளைப் புறக்கணிக்காது, அவற்றுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற வேண்டியதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதிலளிக்க வேண்டியதும் அரசின் தார்மீகப் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், இதற்காக ஏற்கனவே உள்ள பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டு, தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement