• Jan 24 2025

இலங்கையில் திருமண வயதை பொதுவான வயது வரம்பிற்கு கொண்டுவர முன்மொழிவு

Chithra / Jan 23rd 2025, 8:08 am
image

  

இலங்கையில் திருமண வயது வரம்பை பொதுவான வயது வரம்பிற்கு கொண்டு வருவதற்கான முன்மொழிவு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவை நேற்றுமுன்தினம் அதன் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தலைமையில் கூடிய போது இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ், 

இலங்கையில் திருமண வயது வரம்பை திருத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் தற்போதுள்ள பல்வேறு திருமணச் சட்டங்களின்படி தற்போதுள்ள திருமண வயது வரம்பை பொதுவான வயது வரம்பிற்கு கொண்டு வருவதற்கு தேவையான திருத்தங்களை தயாரிப்பதற்கு சிவில் அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகளை பெற்று மன்றத்தின் மூலம் இறுதி பரிந்துரைகளை தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் குழந்தை என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் அளிக்க தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் பெண் கவுன்சிலர்கள் மன்றத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மன்றத்தின் பிரதித் தலைவர்களான சட்டத்தரணி சமிந்திரனி கிரியெல்ல, சமன்மலி குணசிங்க மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் திருமண வயதை பொதுவான வயது வரம்பிற்கு கொண்டுவர முன்மொழிவு   இலங்கையில் திருமண வயது வரம்பை பொதுவான வயது வரம்பிற்கு கொண்டு வருவதற்கான முன்மொழிவு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவை நேற்றுமுன்தினம் அதன் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தலைமையில் கூடிய போது இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ், இலங்கையில் திருமண வயது வரம்பை திருத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.அதன்படி, இலங்கையில் தற்போதுள்ள பல்வேறு திருமணச் சட்டங்களின்படி தற்போதுள்ள திருமண வயது வரம்பை பொதுவான வயது வரம்பிற்கு கொண்டு வருவதற்கு தேவையான திருத்தங்களை தயாரிப்பதற்கு சிவில் அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகளை பெற்று மன்றத்தின் மூலம் இறுதி பரிந்துரைகளை தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கிடையில் குழந்தை என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் அளிக்க தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் பெண் கவுன்சிலர்கள் மன்றத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் மன்றத்தின் பிரதித் தலைவர்களான சட்டத்தரணி சமிந்திரனி கிரியெல்ல, சமன்மலி குணசிங்க மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement