வற் வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரணில்-ராஜபக்ச அரசின் இறுதி கட்டம் ஆரம்பமாகி விட்டதாகவும் சுட்டிக்காட்டி, உள்நாட்டு திறைவரி திணைக்களத்திற்கு முன்பாக சிலவில் செயற்பாட்டாளர்கள் சிலரால் துக்க சோறு சமைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு துக்க சோறு சமைக்கப்பட்டதோடு காகங்களை அழைத்து காகங்களுக்கு வைக்கப்பட்டது. அப்போது காகம் அமெரிக்கா சென்றுவிட்டது என பஸில் ராஜபக்சவை மறைமுகமாக சட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிற்கு உண்பதற்கு வழி இல்லை என்பதால் அதை வெளிப்படுத்தும் விதமாகவும் வரிகளை குறைக்குமாறு வலியுறுத்தியுமே குறித்த செயற்பட்டு மேற்கொள்ளப்பட்டதாக சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வரி திணைக்கள அதிகாரிகள் முறையாக செயற்பட்டு முறையாக வரிகளை வசூலித்தால் அரச வருமானம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரி திணைக்களத்திற்கு முன்பாக துக்க சோறு சமைத்து எதிர்ப்பு.samugammedia வற் வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரணில்-ராஜபக்ச அரசின் இறுதி கட்டம் ஆரம்பமாகி விட்டதாகவும் சுட்டிக்காட்டி, உள்நாட்டு திறைவரி திணைக்களத்திற்கு முன்பாக சிலவில் செயற்பாட்டாளர்கள் சிலரால் துக்க சோறு சமைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துக்க சோறு சமைக்கப்பட்டதோடு காகங்களை அழைத்து காகங்களுக்கு வைக்கப்பட்டது. அப்போது காகம் அமெரிக்கா சென்றுவிட்டது என பஸில் ராஜபக்சவை மறைமுகமாக சட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்களிற்கு உண்பதற்கு வழி இல்லை என்பதால் அதை வெளிப்படுத்தும் விதமாகவும் வரிகளை குறைக்குமாறு வலியுறுத்தியுமே குறித்த செயற்பட்டு மேற்கொள்ளப்பட்டதாக சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, வரி திணைக்கள அதிகாரிகள் முறையாக செயற்பட்டு முறையாக வரிகளை வசூலித்தால் அரச வருமானம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.