• Nov 24 2024

சோலார் பவர் உற்பத்தியை விரிவுபடுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம்..!

Sharmi / Jul 29th 2024, 4:28 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் சோலார் பவர் உற்பத்தியை விரிவுபடுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதி பொதுமக்களினால் இன்று(29)  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஏற்கனவே வயல் நிலங்களில் அமைக்கப்பட்ட சோளர் பவர் உற்பத்தி திட்டத்தினால் பல்வேறு அசௌகரியங்களை தாங்கள் எதிர்கொண்டுவரும் நிலையில் மீண்டும் அதனை விரிவுபடுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் தமது சூழல் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் தமக்கான காணி தேவையினையும் பூர்த்திசெய்யமுடியாத நிலையேற்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இன்று காலை வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நாவற்காடு பகுதி பொதுமக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் இதன்போது குறித்த திட்டத்தினை தடுத்து நிறுத்துமாறு பல்வேறு கோசங்களும் எழுப்பப்ப்பட்டன.

எமது சூழல் எமக்கே வேண்டும்,குடியிருப்பு காணிகளை கொள்ளையடிக்காதே,கால்நடை வளர்ப்பினை முடக்காதே,சலுகைகள் வேண்டாம் எங்களை வாழவிடு,வாழ்வதற்கான நிலப்பற்றாக்குறை ஏற்படும் எங்களுக்கான தீர்வினைக்கொடு,நிம்மதியான வாழ்க்கையினை நிர்மூலமாக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இதன்போது பிரதேச செயலகத்திற்குள் போராட்டக்காரர்கள் செல்லமுற்பட்டபோது ஐந்து பேர் மட்டும் உள்ளே அழைக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டதுடன் தமது கோரிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

நாங்கள் வீட்டுக்கு ஒரு மாடு வளர்க்கும் செயற்பாடுகளை எமது கிராமத்தில் முன்னெடுத்துவருகின்றோம்.

இவ்வாறான சோளர் பவர் செயற்பாடுகள் காரணமாக தமது மாடுகளை மேய்ப்பதற்கான மேய்ச்சல் தரைகூட இல்லாமல் செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பாக கடந்த மூன்றாம் மாதம் பிரதேச செயலாளருக்கு இந்த விடயங்களை நிறுத்தக் கோரி கடிதம் மூலமாக தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களது பகுதியில் மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றதாகவும் இந்த சோலார் திட்டத்தினை எந்த மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நான்கு தடவைகள் இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பேசியபோதும் இதுவரை எதுவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்த சோலார் திட்டத்தினால் அதிக வெப்பம் உறிஞ்சப்படுவதாகவும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகள் இல்லாமல் போவதாகவும், இதனால் கால்நடைகள் அழிந்து போவதாகவும் எதிர்கால சந்ததிகளும் அதே குடியிருப்பில் வாழ்வதற்கு ஆசைப்படுவதாகவும் இந்த சோலார் திட்டத்தினை மேலும் மேலும் விஸ்தரிப்பு செய்ய செய்ய தங்களது குடியிருப்பு அழிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

நாங்கள் இருப்பது வெறும் 10 பேர்ச் காணியில் மேலும் காணிகளை வாங்கித்தான் எங்களது பிள்ளைகளை அங்கு நாங்கள் வாழ வைக்க வேண்டும். இந்த சோலார் நமக்கு வேண்டாம் எனவும் பிரதேச செயலாளரிடம் பல தடவைகள் வந்தும் இது தொடர்பாக எந்த முடிவு எட்டப்படவில்லை எனவும் தங்களுக்கு சிறந்த ஒரு தீர்வை பெற்றுத் தருமாறும் பொதுமக்கள் தெரிவித்தனர்.



சோலார் பவர் உற்பத்தியை விரிவுபடுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் சோலார் பவர் உற்பத்தியை விரிவுபடுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதி பொதுமக்களினால் இன்று(29)  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.ஏற்கனவே வயல் நிலங்களில் அமைக்கப்பட்ட சோளர் பவர் உற்பத்தி திட்டத்தினால் பல்வேறு அசௌகரியங்களை தாங்கள் எதிர்கொண்டுவரும் நிலையில் மீண்டும் அதனை விரிவுபடுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் தமது சூழல் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் தமக்கான காணி தேவையினையும் பூர்த்திசெய்யமுடியாத நிலையேற்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.இன்று காலை வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நாவற்காடு பகுதி பொதுமக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் இதன்போது குறித்த திட்டத்தினை தடுத்து நிறுத்துமாறு பல்வேறு கோசங்களும் எழுப்பப்ப்பட்டன.எமது சூழல் எமக்கே வேண்டும்,குடியிருப்பு காணிகளை கொள்ளையடிக்காதே,கால்நடை வளர்ப்பினை முடக்காதே,சலுகைகள் வேண்டாம் எங்களை வாழவிடு,வாழ்வதற்கான நிலப்பற்றாக்குறை ஏற்படும் எங்களுக்கான தீர்வினைக்கொடு,நிம்மதியான வாழ்க்கையினை நிர்மூலமாக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படும்.இதன்போது பிரதேச செயலகத்திற்குள் போராட்டக்காரர்கள் செல்லமுற்பட்டபோது ஐந்து பேர் மட்டும் உள்ளே அழைக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டதுடன் தமது கோரிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.நாங்கள் வீட்டுக்கு ஒரு மாடு வளர்க்கும் செயற்பாடுகளை எமது கிராமத்தில் முன்னெடுத்துவருகின்றோம்.இவ்வாறான சோளர் பவர் செயற்பாடுகள் காரணமாக தமது மாடுகளை மேய்ப்பதற்கான மேய்ச்சல் தரைகூட இல்லாமல் செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.அத்தோடு இந்த விடயம் தொடர்பாக கடந்த மூன்றாம் மாதம் பிரதேச செயலாளருக்கு இந்த விடயங்களை நிறுத்தக் கோரி கடிதம் மூலமாக தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களது பகுதியில் மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றதாகவும் இந்த சோலார் திட்டத்தினை எந்த மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நான்கு தடவைகள் இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பேசியபோதும் இதுவரை எதுவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.இந்த சோலார் திட்டத்தினால் அதிக வெப்பம் உறிஞ்சப்படுவதாகவும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகள் இல்லாமல் போவதாகவும், இதனால் கால்நடைகள் அழிந்து போவதாகவும் எதிர்கால சந்ததிகளும் அதே குடியிருப்பில் வாழ்வதற்கு ஆசைப்படுவதாகவும் இந்த சோலார் திட்டத்தினை மேலும் மேலும் விஸ்தரிப்பு செய்ய செய்ய தங்களது குடியிருப்பு அழிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.நாங்கள் இருப்பது வெறும் 10 பேர்ச் காணியில் மேலும் காணிகளை வாங்கித்தான் எங்களது பிள்ளைகளை அங்கு நாங்கள் வாழ வைக்க வேண்டும். இந்த சோலார் நமக்கு வேண்டாம் எனவும் பிரதேச செயலாளரிடம் பல தடவைகள் வந்தும் இது தொடர்பாக எந்த முடிவு எட்டப்படவில்லை எனவும் தங்களுக்கு சிறந்த ஒரு தீர்வை பெற்றுத் தருமாறும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement