• Nov 24 2024

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலிகளை சர்வதேசத்திற்கு வலியுறுத்தி திருமலையில் போராட்டம்..!

Sharmi / Aug 29th 2024, 12:11 pm
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நாளையதினம்(30) திருமலையில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு  திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினால் இன்றையதினம்(29) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாளை (30) திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகளை சர்வதேசத்திற்கு மீண்டும் வலியுறுத்தி அதன்மூலம் அதற்கான நீதியை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கின்றனர். 

குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒரு குரலாக தமது கோரிக்கைகளை வெளிப்படுத்த எதிர்பார்க்கின்றனர்.

இதற்கு எதிராக தடையுத்தரவுகள் பெறப்பட்டாலும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து தமது உரிமைகளை வெளிப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, அவர்களது வலிகளை எமது வலிகளாக உணர்ந்து உங்களது பூரண ஆதரவை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலிகளை சர்வதேசத்திற்கு வலியுறுத்தி திருமலையில் போராட்டம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நாளையதினம்(30) திருமலையில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு  திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் அவ் அமைப்பினால் இன்றையதினம்(29) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாளை (30) திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகளை சர்வதேசத்திற்கு மீண்டும் வலியுறுத்தி அதன்மூலம் அதற்கான நீதியை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கின்றனர். குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒரு குரலாக தமது கோரிக்கைகளை வெளிப்படுத்த எதிர்பார்க்கின்றனர். இதற்கு எதிராக தடையுத்தரவுகள் பெறப்பட்டாலும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து தமது உரிமைகளை வெளிப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எனவே, அவர்களது வலிகளை எமது வலிகளாக உணர்ந்து உங்களது பூரண ஆதரவை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement