• Nov 21 2024

திருமலையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளுக்கு வீடு நிர்மாணிப்புக்கான உதவிகள் வழங்கி வைப்பு...!

Sharmi / Feb 22nd 2024, 4:14 pm
image

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிப்புக்கான முதற்கட்ட காசேலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22) மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் தலைமையில் திருகோணமலை கிளை இலங்கை செஞ்சிலுவைச் சங்க கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. 

சிலி நாட்டினைத் தலைமையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச தொண்டு நிறுவனமான செலவிப் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்களின் நிதி அனுசரணையில் திருகோணமலை மற்றும் வாகரைப் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்டவுள்ள நிரந்தர வீடுகளுக்கான முதற்கட்ட காசோலைகள் குறித்த  பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. 

யுத்தம் மற்றும் இயற்கைப் பேரழிவு காரணமாக நிரந்தர வீடுகள் இன்றி கஷ்டப்பட்டு ஓலைக் குடிசைகளில் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கே மேற்படி வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது. இந்த வீட்டுத் திட்ட உதவிகள் தமிழ், முஸ்லிம், சிங்கள இனம் என்ற பாகுபாடின்றி  நீண்டகால வீட்டுத் தேவையுடைய அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட நாளாந்தக் கூலித் தொழில் செய்து வீடுகள் நிர்மாணிக்க வசதியற்ற  குடும்பங்களுக்கே இந்த  உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. 

தலா சுமாா் 10 இலட்சம்  பெறுமதி கொண்ட இந்த வீடு நிர்மாணிப்பு பணிகளுக்கு  செலவிப் பவுண்ஷேன் 60 வீத நிதியினையும், வன்னி ஹோப் நிறுவனம் 30 வீத நிதியினையும் 10 வீத நிதியினை பயளாளிகளின் பங்களிப்புகளில் நிர்மாணிக்கப்டவுள்ளது. 

இந்நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளரும், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளருமான ஏ.எஸ்.எம். பாயிஸ் , சிறப்பு அதிதியாக திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரவீச்சந்திரன் கலந்து சிப்பித்ததுடன் மக்கள் சேவை மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதன் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


திருமலையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளுக்கு வீடு நிர்மாணிப்புக்கான உதவிகள் வழங்கி வைப்பு. திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிப்புக்கான முதற்கட்ட காசேலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22) மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் தலைமையில் திருகோணமலை கிளை இலங்கை செஞ்சிலுவைச் சங்க கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. சிலி நாட்டினைத் தலைமையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச தொண்டு நிறுவனமான செலவிப் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்களின் நிதி அனுசரணையில் திருகோணமலை மற்றும் வாகரைப் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்டவுள்ள நிரந்தர வீடுகளுக்கான முதற்கட்ட காசோலைகள் குறித்த  பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. யுத்தம் மற்றும் இயற்கைப் பேரழிவு காரணமாக நிரந்தர வீடுகள் இன்றி கஷ்டப்பட்டு ஓலைக் குடிசைகளில் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கே மேற்படி வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது. இந்த வீட்டுத் திட்ட உதவிகள் தமிழ், முஸ்லிம், சிங்கள இனம் என்ற பாகுபாடின்றி  நீண்டகால வீட்டுத் தேவையுடைய அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட நாளாந்தக் கூலித் தொழில் செய்து வீடுகள் நிர்மாணிக்க வசதியற்ற  குடும்பங்களுக்கே இந்த  உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. தலா சுமாா் 10 இலட்சம்  பெறுமதி கொண்ட இந்த வீடு நிர்மாணிப்பு பணிகளுக்கு  செலவிப் பவுண்ஷேன் 60 வீத நிதியினையும், வன்னி ஹோப் நிறுவனம் 30 வீத நிதியினையும் 10 வீத நிதியினை பயளாளிகளின் பங்களிப்புகளில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளரும், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளருமான ஏ.எஸ்.எம். பாயிஸ் , சிறப்பு அதிதியாக திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரவீச்சந்திரன் கலந்து சிறப்பித்ததுடன் மக்கள் சேவை மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதன் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement