• Dec 26 2024

யாழில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கல்

Tharmini / Dec 24th 2024, 4:27 pm
image

இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இன்று (24) , 513ஆவது பிரிகேட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத், கனாடாவைச் சேர்ந்த வர்த்தகர் ரஜிகரன் சண்முகரத்தினம், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார், சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் கர்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வர்த்தகரான ரஜிகரன் சண்முகரத்தினத்தின் நிதி உதவியில் வழங்கப்பட்டிருந்தது.






யாழில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கல் இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இன்று (24) , 513ஆவது பிரிகேட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத், கனாடாவைச் சேர்ந்த வர்த்தகர் ரஜிகரன் சண்முகரத்தினம், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார், சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் கர்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வர்த்தகரான ரஜிகரன் சண்முகரத்தினத்தின் நிதி உதவியில் வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement